விஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்

விஜய் டிவியில் வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ‘சிவா மனசுல சக்தி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது.

சிவா அதீத கடவுள் நம்பிக்கை உடையவர், சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பதுதான் என்று நம்புபவர். மறுபுறம் சக்தி அன்பும் காதலும் பெரிதாகப் பெறாத ஒருவர். ஆனால் சந்தோஷத்திற்கான வழி மனம் சொன்ன போக்கில் நடப்பது என்று நம்புபவர்.

இப்படி மாறுபட்ட கோணங்களை கொண்ட சிவா மற்றும் சக்தி இருவரும் சந்திக்கிறார்கள். பின்னர் அவர்களது வாழ்கை பயணம் எப்படி தொடங்குகிறது என்பதுதான் இத் தொடரின் கதை.

பஷீர் இயக்கும் இந்தத் தொடரில் சிவாவாக டிவி நடிகர் விக்ரம் நடிக்கிறார். இவர் கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இத் தொடரில் சக்தியாக தனுஜா நடிக்கிறார். இவர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமானவர். இத் தொடர் மூலம் இருவரும் தமிழில் அறிமுகமாகிறார்கள்.

Read Previous

விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’

Read Next

விஜய் 63 – இன்று படப்பிடிப்புஆரம்பம்

Most Popular