எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது.
‘தெறி, மெர்சல்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கப் பிறகு அட்லீ, விஜய் கூட்டணி இணையும் மூன்றாவது படம் இது.
ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பில் விஜய் நடிக்கும் முதல் படம் இது. விஜய் – நயன்தாரா இருவரும் ‘வில்லு’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.
விஜய், ஏஆர் ரகுமான் கூட்டணி ஐந்தாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.
இந்தப் படத்தின் பூஜை கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்றது.
இன்று படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இதற்காக காலை சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமாகிறது.
படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட உள்ளார்கள்.