சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘மிஸ்டர் லோக்கல்’

ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.

இது பற்றிய அறிவிப்பு படத்தின் முதல் பார்வையுடன் சற்று முன் வெளியிடப்பட்டது.

‘சீமராஜா’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இது.

2016ல் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்குப் பிறகு மூன்று வருட இடைவெளியில் ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா இதற்கு முன் ‘வேலைக்காரன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா முதல் முறையாக இசையமைக்கிறார்.

படத்தை கோடை விடுமுறையில் வெளியடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

Read Previous

சர்வம் தாள மயம் – விமர்சனம்

Read Next

தயாரிப்பாளராக இருப்பது கஷ்டம் – சந்தானம்