கடைசி கட்ட படப்பிடிப்பில் ‘தமிழரசன்’

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வரும் இந்தப் படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிவடைய உள்ளது.

Read Previous

இன்று மார்ச் 29, 2019 வெளியாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’

Read Next

Dharmaprabhu – Official Teaser