காஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.

இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.

‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.

Read Previous

ஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்

Read Next

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’