சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளிவந்த படம் ‘காஞ்சனா 3’.
இப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 53 கோடி வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கிலும் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் இரண்டு நாட்களில் சுமார் 10 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாம். தமிழ்நாடு, வெளிநாடுகளில் இரண்டு நாட்களில் 43 கோடி வரை வசூலித்துள்ள இப் படத்தின் இரண்டு நாள் மொத்த வசூல் 53 கோடி.
இரண்டே நாட்களில் இப்படிப்பட்ட வசூலை ‘காஞ்சனா 3’ படம் அள்ளியிருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சில நாட்களில் இப்படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.