சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா படேல் இணைந்துள்ளார்.
“நான் இந்தப் படத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்க்கிறேன். படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என் கதாபாத்திரத்தை மிகவும் ஃபேஷனாக வடிவமைத்துள்ளார்,” என்கிறார்.
G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் எழில் இயக்கும் திகில் படத்திலும் நிகிஷா நடித்து முடித்துவிட்டார். சமீபத்தில்தான் இவர் டி-சீரிஸ் இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.