விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் அடிக்கடி பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற புதிய நிகழ்ச்சியை ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த வாரம் மே 26ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பான்டே தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் இரண்டு நட்சத்திர அணிகள், நான்கு கலகலப்பான சுற்றுகள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெறும் அணியிலிருந்து ஒருவல் ‘லக்கி ரூமிற்கு’ செல்வார். உள்ளே சென்ற போட்டியாளர் வெளியில் வைக்கப்பட்டுள்ள நான்கு ‘போடியத்தில்’ ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு போடியத்திலும் ஒரு குறிப்பிட்ட பரிசுத் தொகை இருக்கும். அது என்ன என்பது ரூமிற்குள் சென்றவருக்குத் தெரியாது.

பிற போட்டியாளர்கள் அவரை பெரிய டிவி மூலம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு சுற்றிற்கும் பரிசுத் தொகை அதிகரித்துக்கொண்டே போகும். நான்கு சுற்றின் முடிவில் எந்த அணி அதிக பரிசுத் தொகையுடன் உள்ளார்களோ அவர்களே அந்த வாரத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியில் ருபாய் ஒரு லட்சம் வரை வெற்றி பெறலாம்.

கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சியில் மகேஷ், பாலாஜி, கிரேஸ், சேது ஒரு அணியாகவும், ரேமா, சதிஷ், யோகி, ரக்ஷன் மற்றொரு அணியிலும் போட்டியிட்டார்கள். இதில் மகேஷ் அணி தோல்வியைத் தழுவியது.

இனி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு இந்த கலகலகப்பான நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

Read Previous

குழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் – எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

Read Next

சிம்பு கிடைத்தது வரம், பாராட்டும் தயாரிப்பாளர்