சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் மற்றும் பலர் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘சாஹோ’.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘சாஹோ’ கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
படம் வெளியான இரண்டு வாரங்களுக்குள் 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், திரையுலகில் விசாரித்தால் ஹிந்தியில் மட்டும்தான் படம் லாபத்தைத் தரும், மற்ற மொழிகளில் நஷ்டம் வரும் என்று சொல்கிறார்கள்.