சேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’

பல்லட்டே கொக்காட் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் கதையின் நாயகனாக நடித்துளள படம் ராஜாவுக்கு செக்.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சரண், வசந்தபாலன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.

படத்தின் கதையின் நாயகன் சேரன் பேசுகையில்,

“இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும்.

நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ். பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார்.

இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்,” என்றார்

இயக்குநர் சாய் ராஜ்குமார் பேசும் போது,

“என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக் கொண்ட வசந்த் சாருக்கு முதல் நன்றி. அடுத்து சரண் சாரிடம் ஐந்து படங்கள் வேலை செய்தேன். எஸ்.பி சரண் தான் என்னை ‘மழை’ படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பத்மாமகன் தான் இந்தப் படத்தை வாங்கிக் கொடுத்தார். அவருக்கும் நன்றி. இப்படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள்.

சேரன் சாரிடம் இப்படத்திற்காக முதலில் பேசும்போது ஒத்துவரவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ‘ரிபிளேஸ்’ பண்ணிவிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல் இப்படத்தில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது.

இர்பானை நெகட்டிவ் ரோல் பண்ணச்சொன்னேன், அவர் யோசித்தார். ஆனால், மிகச் சிறப்பாக நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே, கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இது போல் எல்லா கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்கும்.

எம்.எஸ் பிரபு சார் அப்படி ஒரு ஸ்பீடான கேமராமேன். இசை அமைப்பாளர் வினோத் எஜமான்யா தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணிருக்கிறார். இப்படத்தின் ஆர்ஆர் மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. மேலும் ஆர்ட் டைரக்டர், எடிட்டர் எல்லோரும் படத்தில் நிறைய உழைத்திருக்கிறார்கள்,” என்றார்

Read Previous

விக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

Read Next

பிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்