இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அக்னி சிறகுகள்’

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்க, நவீன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைக்க, விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’.

ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜேஎஸ்கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.
இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை ‘அக்னி சிறகுகள்’ பெற்றுள்ளது.

பிரமாண்ட விஷுவல்களும், மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.

“ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது. இயக்குநர் நவீனின் அட்டகாச கதைசொல்லல் முறையும், அவரது குழு படத்தை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியுள்ளது. இப்படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை உலகத் தரத்தில் தரும் படைப்பாக இருக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர் டி.சிவா.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Read Previous

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்

Read Next

24 நாட்களில் முடிக்கப்பட்ட ‘எதிர் வினையாற்று’