சியான்கள் – ஏழு முதியவர்களின் வாழ்வியல் படம்

கேஎல் புரொடக்ஷன்ஸ் சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’.

2018ம் ஆண்டு வெளிவந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற ‘கடிகார மனிதர்கள்’ படத்தை இயக்கிய வைகறை பாலன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது,

“வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக இப்படத்தை உருவாக்கி உள்ளோம். மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண் வாசத்தை, அன்பைத் தெளிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.

வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள். அவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உண்மையில் நடந்த பல சம்பவங்களைத் தொகுத்து அதனைக் கதையில் சேர்த்திருக்கிறேன்.

சியான்கள் என்பது கிராமத்துப் பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின் வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம்.

உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும் கூடவே வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும்.

இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்.

இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும். அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்.

தயாரிப்பாளர் , நாயகன் கரிகாலன் படம் பற்றிக் கூறுகையில்,

“இந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாபாத்திரமாகத்தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால்தான் இப்படம் நடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம் இருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட இருக்கிறோம்,” என்றார்.

Read Previous

ஜடா, வழக்கமான படம் கிடையாது – கதிர்

Read Next

‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்

Most Popular