கூடு – ஒரு கிராமம், 35 நாட்கள்…

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’.

அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக் மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் சார்பில் சூனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மின்மாற்றிக்குள் அரிய வகைப் பறவை ஒன்று முட்டையிட்டு கூடு கட்டுகிறது. அந்தக் கூட்டையும் முட்டைகளையும் பாதுகாக்கும் வகையில், அவை பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க ஒட்டுமொத்த கிராம மக்களும் முடிவெடுக்கின்றனர். இந்த நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘கூடு’ திரைப்படம் உருவாகியுள்ளது.

மனிதநேயம், கருணை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. சாதாரண மனிதர்களின் சிறிய தியாகங்கள்கூட எத்தகைய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பதிவு செய்யும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி பனோரமா ஸ்டுடியோஸ் தலைவர் குமார் மங்கட் பதக் கூறியதாவது :

“தயாரிப்பாளர்களாக, வித்தியாசமான கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுகள், அன்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை அழகாக இணைத்திருப்பதால் ‘கூடு’ திரைப்படம் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதை ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறோம்.”

பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் கூறியதாவது :

“மனிதநேயம் என்பது எப்போதும் மிகப்பெரிய செயல்களைச் செய்வதில் மட்டுமே இல்லை என்பதை ‘கூடு’ திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிறது. மற்றொரு உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யும் ஒரு சிறிய தியாகம்கூட மிகப்பெரிய அர்த்தத்தைக் கொண்டது. ஒரு பறவையின் கூட்டைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றிணைந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதுடன் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்தக் கதை இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினோம்.”

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் M. கணேஷ் கூறியதாவது :

“‘கூடு’ திரைப்படத்தின் சிறப்பம்சமே அதன் மையத்தில் இருக்கும் அழகான சிந்தனைதான். மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சிறிய செயல்களின் மூலம் உருவாகும் பெரிய மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டாடும் கதை இது. இப்படத்தின் அன்பும் உணர்வுகளும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறோம்.”

கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறியதாவது :

“நேர்மையான அணுகுமுறையும் ஆழமான உணர்வுகளும் கொண்ட கதையாக ‘கூடு’ எங்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையிலிருந்து உருவாகும் கதைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்ள முடியும் என்பதை இப்படம் பிரதிபலிக்கிறது. கருணையையும் சமூக ஒற்றுமையையும் கொண்டாடும் இப்படத்துடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

‘கூடு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Read Previous

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

Read Next

சங்கராபரணம் – மீண்டும் வெளியீடு