பேமிலி பாய் – முதல் சிங்கிள் வெளியீடு

மித்துன் மாணிக்கம் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்..’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன் V படத்தொகுப்பு பணிகளையும், சி.கே. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி பேமிலி டிராமா, ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ளார். மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP சார்பில் முஹம்மத் கனி ஃபைசல், டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகத்தில் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் ‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் ‘தீராகணம்..’ என்ற பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இப்பாடலை மித்துன் மாணிக்கம் எழுதியுள்ளார். ஆதித்யா RK, மால்வி சுந்தரேசன், அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மெலோடியான காதல் பாடலாக உருவாகியுள்ள இது தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

லிரிக்கல் வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…’ என்ற கவிதை பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

இப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Read Previous

ஏஆர் ரகுமான் ‘வொண்டர்மென்ட் டூர்’