சூரி – ரவிக்குமார் இணையும் புதிய படம் ஆரம்பம்

‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடங்கியுள்ளது. ‘சூரி 7’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் இப்படத்தில் சூரி ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கிப் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

வித்தியாசமான கதைகளில் நடித்து கவனம் ஈர்த்துவரும் சூரி, ரவிக்குமாருடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நகைச்சுவையுடன் புதுமையான கதைக்களங்களை வழங்குவதில் பெயர் பெற்ற ரவிக்குமார், இப்படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், தமிழில் தங்களது தயாரிப்புகளுக்குக் கிடைத்த வரவேற்பு மேலும் பல படங்களை உருவாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சூரி நடிக்கும் இப்படம் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், சூரியின் திறமைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற படைப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்காவது தமிழ்ப் படமாக இது உருவாகிறது. படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

ஜெயிலர் 2 – விமர்சனம்

Read Next

அதிரடியான வரவேற்பில் ‘ஜெயிலர் 2’