மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியாவின் தொழில்துறை முன்னோடியும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார்.
வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆர். மாதவனுடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராம், கனிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. IMDb வெளியிட்டுள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய இந்திய திரைப்படங்கள் மற்றும் ஷோஸ் பட்டியலில் இப்படம் 11.1% ரியல்டைம் மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.