விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு, அதன் தயாரிப்பாளர்கள் 12 குறிப்பிட்ட ‘கட்’கள் மற்றும் மாற்றங்களை மேற்கொண்ட பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘ஏ’ (பெரியவர்கள் மட்டும்) சான்றிதழ் வழங்கியுள்ளது.
திருத்தக் குழு பரிந்துரைக்கு பின்னர் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் இறுதி சான்றளிக்கப்பட்ட கால அளவு 183.11 நிமிடங்கள்.
சிபிஎஃப்சி உத்தரவிட்ட வெட்டுகள் மற்றும் மாற்றங்கள்:
– டாக்டர் அம்பேத்கர் படம் புத்தக அட்டையில் தோன்றும் காட்சிகள் மாற்றப்பட்டன.
– “அம்பேத்கர் சட்டம்” என்ற வசனம் “டிவிகே சட்டம்” என மாற்றப்பட்டது; படம் முழுவதும் “டிவிகே” பயன்பாடு நீக்கப்பட்டது.
– இந்திய தேசியக் கொடி தரையில் விழும் காட்சிகள் நீக்கப்பட்டன.
– “பாகவதம்” மற்றும் “ரங்கநாதர்” என்ற சொற்கள் மௌனப்படுத்தப்பட்டன.
– “தே…….பையா” மற்றும் “ஓ…..தா” ஆகிய சொற்கள் மௌனப்படுத்தப்பட்டன.
– “ஓம்”, “நியூ இந்தியா” (ஆபரேஷன் மேலுஹா விளக்கத்தில்), சதாம் ஹுசைன் தூக்கில் போடப்பட்டதைப் பற்றிய வசனம் ஆகியவை மௌனப்படுத்தப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
– டிசி அலுவலக பேட்ஜ் அவமரியாதையாக உருட்டப்படும் காட்சி நீக்கப்பட்டு மாற்றப்பட்டது.
– “பொன்னோட… கொடுத்து வச்சிருக்கணும், உடம்பு இருக்குன்னு” என்ற முழு வசனம் மௌனப்படுத்தப்பட்டது.
– “இந்தியா என் கால்ல விழ வைக்கறேன்” என்ற வசனம் மௌனப்படுத்தப்பட்டது.
– குழந்தை எரியும் காட்சிகள் நீக்கப்பட்டு மாற்றப்பட்டன.
– “சிலுவையா” என்ற சொல் மௌனப்படுத்தப்பட்டது.
– “ஷீலா ராணி” என்ற பெயர் படத்தில் இடம்பெறும் இடங்களில் மாற்றப்பட்டது.
மாற்றங்கள் :
மொத்த வெட்டுகள்: 20 வினாடிகள்
மொத்த மாற்றங்கள்: 10 வினாடிகள்
இறுதி கால அளவு: 183.11 நிமிடங்கள்
‘ஏ’ சான்றிதழுடன் படம் திரையரங்குகளில் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.