‘கூலி’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் உபேந்திரா

‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உபேந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது விசாகப்பட்டினத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. இதற்காக விரைவில் செல்லவுள்ளார் ரஜினி. இதில் தான் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். இதில் ரஜினி, நாகார்ஜுனா, செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ளவுள்ளார்கள். இந்த படப்பிடிப்பு சுமார் 50 நாட்கள் வரை நடைபெறுகிறது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் உபேந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் அவருடனான காட்சிகளையும் படமாக்கவுள்ளது படக்குழு. அனைத்து திரையுலகைச் சார்ந்த நடிகர்களும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், இந்தப் படத்தின் கதைக்களமும் ‘ஜெயிலர்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read Previous

பிரபாஸ் குறித்து சர்ச்சைக் கருத்து: சிக்கலில் பாலிவுட் நடிகர்

Read Next

அக்டோபர் 10 அன்று ரிலீஸாகும் ரஜினிகாந்தின் வேட்டையன்