மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால்

முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரத்னம்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார் விஷால். இதனை அவரே இயக்கி, நடித்து, தயாரிக்கவும் உள்ளார்.

இதனிடையே, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிப்பதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தமும் முடிவடைந்துவிட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பதல் குழப்பம் நீடித்தது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது முத்தையாக இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை. தற்போது தனது மகனை நாயகனாக்கி ‘சுள்ளான் சேது’ என்ற படத்தினை இயக்கி வருகிறார் முத்தையா. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தினை இயக்குவார் என தெரிகிறது.

Read Previous

ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்

Read Next

நடிப்பில் தவறு: ஆமிர்கான் ஒப்புதம்

Most Popular