நாயகனாக அறிமுகமாகும் விஜயகுமாரின் பேரன்

விஜயகுமார் பேரன் விஜய் ஸ்ரீஹரி நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

வித்தியாசமான கதைக் களங்கள் கொண்ட படங்களை இயக்குபவர் பிரபு சாலமன். ’கும்கி’ படத்தின் மூலம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை நாயகனாக அறிமுமாக்கியவர் பிரபு சாலமன். இறுதியாக கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ’செம்பி’ படத்தினை இயக்கி இருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

மேலும், நீண்ட நாட்களாகவே ‘கும்கி 2’ படத்தினையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதையும் ரகசியமாக வைத்திருக்கிறார். இந்தப் படத்தினைத் தொடர்ந்து புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபு சாலமன்.

இந்தப் படத்தில் விஜயகுமாரின் பேரன் விஜய்ஸ்ரீஹரியை நாயகனாக அறிமுகம் செய்யவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் விஜய் ஸ்ரீஹரி. விஜயகுமாரின் மகன் வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதியினருக்கு பிறந்தவர் விஜய்ஸ்ரீஹரி. பின்னர் இருவரும் விவாகரத்தாகி பிரிந்துவிட்டார்கள்.

தற்போது தனது தாத்தா விஜயகுமாரின் மேற்பார்வையில் வளர்ந்துவருகிறார் விஜய்ஸ்ரீஹரி. பலமுறை வனிதாவிஜயகுமார் தனது மகன் வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய்ஸ்ரீஹரி நாயகனாக நடிக்கவுள்ளார். இப்போது என்ன பிரச்சினை எல்லாம் வருமோ?

Read Previous

ஹாட் ஸ்பாட் – விமர்சனம்

Read Next

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வல்லவன் வகுத்ததடா பட ட்ரெய்லர்