விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய்யின் மகன் ஜோசன் விஜய் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு, அந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் உள்ளது.

தற்போது தான் இந்தப் படத்தின் முழுமையான கதையை இறுதி செய்திருக்கிறார்கள். இதற்கான திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

முதலில் தமிழில் மட்டுமே பண்ணலாம் என்று முடிவெடுத்து தொடங்கப்பட்ட இந்தப் படம், தற்போது அனைத்து மொழிகளிலும் உருவாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கு தகுந்தாற்போல் கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் இருந்து சில முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்றுள்ளது. 

இந்தப் படம் தொடங்கப்பட்ட போது, கவின் தான் நாயகன் என்ற பேச்சு நிலவியது.

தற்போது, இந்தப் படத்தின் நாயகன் கவின் அல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையை படக்குழு தொடங்கியிருக்கிறது. இதை எல்லாம் முடித்து, நடிகர்களிடம் பேசி சம்மதம் தெரிவித்தவுடன் தான் அதிகாரபூர்வ அறிவிப்பே வெளியாகும்.

இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கலாம், அதற்குள் அனைத்து பணிகளையும் சரியாக முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

Read Previous

’இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ‘கேம் சேஞ்சர்’ – பரபரப்பு பணிகளில் ஷங்கர்

Read Next

ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூ போல பார்த்துக்கொண்டார்கள் – விஜய் ஆண்டனி