யஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் நாயகியாக கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்திய திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார் யஷ். ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு தனது படத்துக்காக நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் யஷ்.
இறுதியாக டிசம்பர் 8-ம் தேதி யஷின் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை கே வி என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘டாக்சிக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக கரீனா கபூர் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதனை பாலிவுட் ஊடகங்கள் பலரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.