ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் ‘மாமன்னன்’ படம் நேற்று சேலத்தில் ஆரம்பமானது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படம் இது.
‘பரியேறும் பெருமாள், கர்ணன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
ஏஆர் ரகுமான், உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் என புதிய கூட்டணி இப்படத்தில் அமைந்துள்ளதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
கலை – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – செல்வா Rk
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
பாடல் – யுகபாரதி
நடனம் – சாண்டி
தயாரிப்பு மேற்பார்வை – E.ஆறுமுகம்
விநியோக நிர்வாகம் – ராஜா.C
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)