விஜய் டிவி – புதிய தொடர் ‘ராஜ பார்வை’

விஜய் டிவியில் வரும் மார்ச் 22ம் தேதி திங்கள் முதல் ஆரம்பமாக உள்ள புதிய தொடர் ‘ராஜ பார்வை’.

பார்வையற்ற இளைஞனின் வாழ்க்கையில் உருவாகும் காதல் தான் இத்தொடரின் கதை. 

வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், சகோதரிகள். ஆனந்த் அழகான புத்திசாலியான இளைஞனன், ஆனால், கண்பார்வையற்றவன், மிகவும் அன்பானவன். அவனது சகோதரன் அரவிந்த்.

சாரு அழகும் நல்ல குணமும் உள்ள பெண். அவளது சகோதரி பவித்ரா. ஆனால், சாரு ஒரு ராசியில்லாத பெண் எனக் கூறி அவளது இரண்டாவது தாயால் வஞ்சிக்கப்படுகிறாள். சாருவும் ஆனந்தும் சந்திக்க நேரிடுகிறது. சாருவை அவளது ஸ்பரிசம் மூலம் உணர்ந்து மனதளவில் காதலிக்க ஆரம்பிக்கிறான் ஆனந்த். சாருவுக்கு ஆனந்த் கண் பார்வையற்றவன் என்பது தெரியாது. இவர்களது வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.

ஆனந்த் ஆக முனாப், சாருவாக ராஷ்மி, அரவிந்த் ஆக விகாஷ், பவித்ராவாக கீர்த்திகா மற்றும் சீனிவாசன், சிவகவிதா, கிரிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு இத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

ஜீ தமிழ் – தேவயானி நடிக்கும் புதிய தொடர் ‘புதுப்புது அர்த்தங்கள்’

Read Next

கலர்ஸ் தமிழ் – ‘மாங்கல்ய சந்தோஷம், அம்மன்’ தொடர்களின் மகா சங்கமம்