ஜீ தமிழ் டிவியில் தேவயானி நடிக்கும் புதிய தொடரான ‘புதுப்புது அர்த்தங்கள்’ வரும் மார்ச் 22ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இளகிய மனம் கொண்ட இந்தக் காலத்து மாமியார் – மருமகளுக்கு இடையேயான அன்பான உறவைச் சொல்லும் குடும்பத் தொடர் இது.
தன்னுடைய மகன் மற்றும் மாமனாரின் நலனைச் சுற்றிப் பின்னப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்காகத் தன்னுடைய தேவைகளைம் சமரசம் செய்து கொள்ளும் லட்சுமியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தொடர்.
தேவயானி தவிர அபிஷேக் சங்கர், விஜே பார்வதி, நியாஸ் மற்றும் திண்டுக்கல் லியோனி ஆகியோர் இத் தொடரில் நடிக்கிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கோலங்கள்’ புகழ் தேவயானி மற்றும் அபிஷேக் ஜோடி பல வருடங்களுக்குப் பிறகு இத் தொடரில் மீண்டும் இணைகிறது.