‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க உள்ள படம் விஜய்யின் 65வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 64வது படமான ‘மாஸ்டர்’ படம் முடிவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது. கொரானோ பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் வருகிறது. 2021 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தை அறிவிக்கும் வழக்கம் கொண்டவர் விஜய். அதே போல ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக அவருடைய 65வது படத்தின் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்ஸ்’ படங்களின் இயக்குனரான நெல்சன் முதல் முறையாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
“வேட்டைக்காரன், சுறா, சர்க்கார்” ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் – விஜய் இணையும் படம் இது.
“கத்தி, மாஸ்டர்” படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
விஜய்யின் 65வது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.