ஜீ தமிழ் டிவியில் வரும் டிசம்பர் 14 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ‘திருமதி ஹிட்லர்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
அழகிய இளம் பெண்ணும், துறுதுறுப்பானவருமான ஹாசினியைச் சுற்றி நிகழும் சுவாரசியமான, குதூகலமான நிகழ்வுகள்தான் இந்தத் தொடர்.
தன்னால் முடியாது என்று ஒருவர் தன் திறமைக்கு சவால் விடுத்தால், அந்த சவால்களைத் தகர்த்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஹாசினியின் கதாபாத்திரத்தில் கீர்த்தனா பொடுவால் நடிக்கிறார். இவரது குணாதிசயத்திற்கு முற்றிலும் நேர் எதிராகவும், எதிலும் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டுமென நினைக்கிறார் – ஏஜே என்று அழைக்கப்படும் அபினவ் ஜனார்தன். தன் உயர்தர வாழ்க்கை முறையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும், தன்னைப் போலவே அவர்களும் முறையாக வாழவேண்டுமென சுற்றி உள்ளவர்களுக்கு அறிவுறுத்துபவர் அபினவ்.
கதையின் போக்கில் இருவருக்கும் இடையில் ஒரு சிக்கலான காதல் ஏற்பட, ஹாசினி தன்னைவிட அதிக வயதுள்ள மூவருக்கு மாமியாராக வேண்டிய சூழல் உருவாகிறது. அதனைத் தொடர்ந்து நகைச்சுவையான பல சுவாரசியங்களுடன் கதை செல்கிறது. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு தொடராக இது இருக்கும் என குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.
அபினவ் ஜனார்த்தன் கதாபாத்திரத்தில் அமித் பார்கவ் நடிக்க, அவரது தாயாக அம்பிகா நடிக்கிறார். பேராசிரியர் ஞானசம்பந்தம் கதாநாயகியின் தந்தையாக நடிக்கிறார். கதாநாயகியின் சித்தியாக கீர்த்தனா நடிக்கிறார். சௌமியா, பவ்யா ஸ்ரீ மற்றும் சுப்பலக்ஷ்மி ஆகியோர் மருமகள்களாக நடிக்கின்றனர்.
ஆயிஷா அப்துல்லா, அர்மான் அப்துல்லா ஆகியோரது நிறுவனமான ஆயிஷ்மான் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் இத் தொடரை எஸ்.என்.ராஜ்குமார் இயக்குகிறார்.
திருமதி ஹிட்லர் – Promo – 1
திருமதி ஹிட்லர் – Promo – 2