நான்தான் சிவா – இன்று இசை வெளியீடு

ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். 

அடுத்து '18 வயசு', விஜயசேதுபதி நடித்த  'கருப்பன்' ஆகிய படங்களை இயக்கினார். 

தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் 'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. 

இதை காதல் மற்றும் ஆக்ஷனுடன் கொடுத்திருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்,” என்றார் இயக்குனர் பன்னீர்செல்வம்.
 
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது.

Read Previous

ஓடிடி – சாதனை விலைக்கு விற்கப்பட்ட ‘நிசப்தம்’ ?

Read Next

ஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தின் டீசர்