யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘தாண்டவம்’ திரைப்படம் இம்மாதம் 28ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
‘தெய்வத் திருமகள்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய், விக்ரம் இணையும் படம் இது. அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், இவர்களுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
கண்பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம், இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் கிஷ் என்பவரை முன்மாதிரியாக வைத்து நடித்திருக்கிறார். கண்பார்வையற்றவராக இருந்தாலும் டேனியல் கிஷ் பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர், இந்த படத்திற்காக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்.
விக்ரமின் நடிப்பு அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
யு டிவி, விஜய், விக்ரம், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ‘தெய்வத்திருமகள்’ படத்திற்குப் பிறகு இந்த படத்தையும் வெற்றிப்படமாக்க உழைத்திருக்கிறார்கள்.