ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், சென்டிமென்ட்டான காரணங்கள் இல்லாமல் தமிழ் சினிமா இருந்தததில்லை.
இந்த சென்டிமென்ட்டுக்கு சமீபத்திய உதாரணம் ‘மும்பை’ சென்டிமென்ட். அஜித் நடித்த ‘மங்காத்தா’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ஆகிய இரு படங்களும் மும்பையில் படமாக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து பல படங்கள் மும்பையில் படமாக்கப்படலாம் என்பதை நாம் இதற்கு முன்னரே ஒரு செய்தியில் தெரிவித்திருந்தோம். அது, இப்போது உண்மையாகி விட்டது.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், முதன் முறையாக இயக்கும் படம் ‘யான்’. ஜீவா, நடிகை ராதாவின் இளைய மகள், ‘கடல்’ படத்தின் நாயகி துளசி, நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ‘மும்பை’யில் ஆரம்பமாகியுள்ளது. ஒரு மாத காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
இன்னும் கொஞ்ச நாளைக்கு ‘ஹிந்தி’ கலந்த தமிழ்ப் படங்களைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்…
யாரங்கே…ஹிந்தி எதிர்ப்பாளர்கள் யாராவது இருக்கிறீர்களா ?