உதயநிதி ஜோடியாக நயன்தாரா

     இந்த ஆண்டின் வெற்றித் திரைப்படங்களில் முதலிடம் பெறுவது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார்.

இவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது ‘சுந்தர பாண்டியன்’ பட இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் என ஏற்கெனவே முறையான அறிவிப்பு வந்து விட்டது.

தற்போது , இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா, தமிழில் அஜித்துடன் ஒரு படத்திலும், ‘ராஜா ராணி’ படத்திலும் நடித்து வருகிறார்.

உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிப்பது பற்றி விரைவில் முறையான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

 

Read Previous

ஜீவா படமும் ‘மும்பை’யில்..அடுத்து யாரோ…?

Read Next

கரு. பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’