புதிய முயற்சியில் ‘நீதானே என் பொன்வசந்தம்’

  மாதங்களில் அவள் மார்கழி  என்று மார்கழி மாதத்தை வர்ணிப்பதுண்டு ,   இவ்வருடம் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு இசை விருந்து  தயாராக உள்ளது.    செவிக்கு விருந்தளித்து  வந்த ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ திரைப்படம்  இப்போது கண்ணுக்கும் கருத்துக்கும்   விருந்தளிக்க உள்ளது .

 ஒவ்வொரு வருடமும் February 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினம் இவ்வருடம் இரண்டாம் முறையாக கொண்டாடப்பட உள்ளது  . அது,  December 14 ஆம்   தேதி     ‘நீதானே என் பொன்வசந்தம் ‘ வெளிவரும் நாள் . இதையொட்டி இப்படத்தின் குழுவினர் மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு யுக்தியை கையாள  உள்ளனர்.

இப்படத்தில் இடம் பெறாத   சுவாரஸ்யமான சில காட்சிகளை  இணையதளம் , தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியிடுவது ஆகும் . இது விரைவில் வெளியாகப் போகும் படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை .

 இப்படத்தின்  ஜோடியான  ‘ நித்யா மற்றும் வருணின் ’(ஜீவா மற்றும் சமந்தா)  30 வருட காதல் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மறக்க முடியாத தருணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் 2 மணி நேர படத்தில் பதிவு செய்ய முடியாது என்பதனால் இந்த முடிவு என்று கூறுகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன்.

” மிகவும் யதார்த்தமான , மனதில் தங்கக் கூடிய, படத்திலும் இடம் பெறாத  தருணங்கள் இப்படத்தில் ஏராளமாக உள்ளன . இவற்றை மக்களிடம் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே   கொண்டு போய்ச் சேர்க்க  வேண்டும் என ஆசைப்பட்டேன்.

இதனை பார்ப்பதின் மூலம் நித்யாவும் வருணும் ரசிகர்கள் மனதில் பரிச்சயம்  ஆவார்கள் , படம் பார்ப்பவர்களும் திரை அரங்கிற்கு மனதளவில் சரியான எதிர்பார்போடு வருவார்கள் ”  என நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குனர்.

 பொதுவாக ஒரு படம் வெளியான பிறகு அதன் காட்சிகளோ அல்லது டிவிடி  யோ வெளியிடப்படும் . ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  சில காட்சிகள்   படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே வெளியாவது ரசிகர்களுக்கு விருந்தாகவும்  உலக சினிமாவிற்கு புதுமையான விஷயமாக அமையும் .

 வருண் மற்றும் நித்யா வின் பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம் மற்றும் வாலிபப்  பருவம் சம்பந்தப்பட்ட  கட்சிகள் இதில் இடம்பெறும் . வருணும் அவனது நண்பன் பிரகாஷ்  (தமிழில் சந்தானமும் , தெலுங்கில் கிருஷ்ணடு ) சம்மந்தப்பட்ட காட்சிகளும் வெளியிடப்படும்.

 இதில்  ”இது உங்களின் முதல் ஊடலாக இருக்கலாம் ”, ”இது உங்களின் பிறந்த நாள் பார்ட்டியாக இருக்கலாம் ” , ” இது உங்களின் முதல் சந்திப்பாக இருக்கலாம் ” போன்ற தலைப்புகளின் காட்சிகளோடு  வெளியிட படும் .

இவற்றைப் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த தருணங்கள் நிகழ்ந்து இருக்கும் என்று இப்படக் குழுவினர் ஆணித்தரமாக நம்புகின்றனர் .

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

வைரமுத்துவின் ‘தண்ணீர் தேசம்’ திரைப்படமாகிறது…