அஜித் படத்திலிருந்து விலகிய அனுஷ்கா

     ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தில் அஜித் நாயகனாக நடிக்க இருப்பது தெரிந்ததே.

இந்த படத்தில் அஜித்துடன் முதன் முறையாக ஜோடி சேருகிறார் தமன்னா.

ஆனால், தமன்னாவுக்கு முன் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிப்பதற்கு அனுஷ்கா தான் நாயகியாக முடிவு செய்யப்பட்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் தற்போது விஷ்ணுவர்தன்  இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே வருகிறது.

எனவே, மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு தேதிகளை தர முடியாத நிலையில் அனுஷ்கா இருந்ததாகவும், அதனால் அவராகவே இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

அனுஷ்கா, தமிழ், தெலுங்கில் தயாராகவிருக்கும் சரித்திரப்படமான ‘ருத்ரமாதேவி’ படத்திற்காக 150 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இப்படத்தை இன்னொரு ‘அருந்ததி’யாக அவர் எதிர்ப்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.

Read Previous

விக்ரம் பிரபு ஜோடியாக புதுமுகம் ‘சுரபி’

Read Next

‘ரிச்சா’ நடிக்கப் போறாரு ரிச்சா…