எழில் இயக்கும் ‘தேசிங்கு ராஜா’

     விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எழில். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த ‘மனம் கொத்திப் பறவை’ நல்ல வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்து, இவர் இயக்கும் படத்திற்கு ‘தேசிங்கு ராஜா’ என பெரிட்டிருக்கிறார். விமல், பிந்து மாதவி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

விமல் தற்போது மூன்று பேர் மூன்று காதல், சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரெண்டாவது படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிந்து மாதவி, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல், பிந்து மாதவி ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். மற்ற  விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

இவர்தான் கார்த்திக் மகன் ‘கௌதம்’

Read Next

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘வத்திக்குச்சி’