இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரித்தும் வருகிறார். இவருடைய முதல் தயாரிப்பான ‘எங்கேயும் எப்போதும்’ ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது, மேலும் இரு படங்களைத் தயாரித்து வருகிறார். ஒன்று ‘வத்திக்குச்சி’. மற்றொன்று ‘ராஜாராணி’.
‘ராஜாராணி’ படம் தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. ஜெய், நயன்தாரா நடிக்கிறார்கள்.
‘வத்திக்குச்சி’ விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. இப்படத்தை கின்ஸ்லின் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திலீபன், அஞ்சலி, ஜெகன், ஜெயப்பிரகாஷ், சம்பத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.