ஹிந்திக்குப் போகிறார் ‘நயன்தாரா’

     தமிழில் நயன்தாரா நடித்த படம் வெளிவந்து  இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. அவர் நடித்த ‘பாஸ் (எ) பாஸ்கரன்’  2010 செப்டம்பர் மாதம் வெளிவந்தது.

இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அஜித் ஜோடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘ராஜா ராணி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, இந்த படம் இப்போது ஹிந்தியிலும் டப் செய்யப்பட உள்ளது.

இப்படத்தின் மூலம் ஹிந்திக்கும் போகப் போகிறார் நயன்.

Read Previous

‘கும்கி’ படத்திற்கு ‘U’ சர்டிபிகேட்

Read Next

மீண்டும் தெலுங்கில் அஞ்சலி