‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்’ படத்திற்கு இசையமைக்கப் போகிறார் ஏ.ஆர். ரகுமான்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகப் போகும் இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார்.
மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகவிருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசந்தபாலன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கப் போவது இதுவே முதல் முறை.
வசந்தபாலன் இயக்கிய முதல் படமான ‘ஆல்பம்’ படத்திற்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. அடுத்து ‘வெயில்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்தார். ‘அங்காடித் தெரு’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் விஜய் ஆண்டனி இசையமைத்தனர். ‘அரவான்’ படத்தில் பின்னணிப் பாடகர் கார்த்தியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
‘காவியத் தலைவன்’ பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.