டென்ஷனைக் குறைப்பது காமெடி படங்கள்தான்- ஷங்கர் பேச்சு

     ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் ஷங்கர் பேசினார்.

அவர் பேசியதாவது, “வேலை காரணமா நமக்குலாம் எப்பவுமே டென்ஷன் அதிகமா இருக்கும், இன்னைக்கு கூட இந்த ஃபங்க்ஷனுக்கு கிளம்பி வரும் போது கூட எனக்கு டென்ஷன்தான்.

காரணம், என் படத்தோட  காஸ்ட்யூம் டிசைனருக்கு உடம்பு சரியில்லாம அவர் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்காரு. அப்புறம் என்னோட அஸிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் வேலை பளு காரணமா வேலையை விட்ட போறன்னு சொல்லிட்டாரு.

இப்படி டென்ஷன் வர்ற நேரத்துல நான் அதிகமா பார்க்கிறது காமெடி படங்கள்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைப் பார்த்தேன். ரொம்ப அழகா பண்ணியிருந்தாங்க. அப்புறம் ‘கலகலப்பு’ படம். சமீபத்துல வந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் பார்த்தேன். சூப்பரான படம். இந்த சந்தர்ப்பத்துல அந்த டீமுக்கு என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறேன்.

இப்போ ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சந்தானம் அன்ட் டீம் கண்டிப்பா ஒரு நல்ல காமெடி படத்தைக் கொடுத்திருப்பாங்க, அவங்க டீமுக்கு என்னோட வாழ்த்துக்கள்,” என்றார்.

 

Read Previous

இயக்குனர் பாலாவின் ஆசை

Read Next

ஜீவா படங்களில் அதிக பிரின்ட்டுகள்

Most Popular