தென்னிந்தியாவின் ஸ்டார் த்ரிஷா

     ஏர்டெல் நிறுவனம் ‘ஏர்டெல் மொபிடியூட் 2012’ என்ற சர்வே ஒன்றை நடத்தியது. இதில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட பிரபலங்களில் நடிகை த்ரிஷா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

த்ரிஷாவின் புகைப்படங்கள்  ஷாரூக் கான், சல்மான் கான் ஆகியோரை விட 325%  அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

த்ரிஷா, திரையுலகிற்கு அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, பூலோகம், என்றென்றும் புன்னகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த சமர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த விஷயம் குறித்து த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி, என்னை 2012ன் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட நடிகையாக உருவாக்கியதற்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

ஜீவா படங்களில் அதிக பிரின்ட்டுகள்

Read Next

‘கடல்’ அடுத்த வாரிசு