என். லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பிரபு சாலமன் இயக்கியிருக்கும் ‘கும்கி’ படம் டிசம்பர் 14ம் தேதி வெளிவர உள்ளது.
இதைத் தொடர்ந்து ‘டும் டும் பீ பீ’ என்ற வித்தியாசமான டைட்டிலுடன் புதிய படத்தை தயாரித்து வருகிறார்கள்.
காதல் கதையான இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் சித்தார்த் ஜோடிகளாக சமந்தா, நித்யா மேனன் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பி.வி. நந்தினி என்ற பெண் இயக்குனர் இயக்கி வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
சென்னை, ஹைதராபாத், மலேசியா போன்ற நாடுகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, தயாரிப்பு – என்.சுபாஷ் சந்திரபோஸ்.
ஜனவரி 2013ல் இப்படத்தின் இசையை வெளியீட திட்டமிட்டிருக்கிறார்கள்.