அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து ‘அமர்க்களம்’ , ‘அட்டகாசம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘வசூல் ராஜா’, ‘ஜே ஜே’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
கடைசியாக அஜித் நடித்த ‘அசல் ’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் கழித்து தற்போது ‘செந்தட்டிக் காளை செவத்தக் காளை’ என்ற படத்தை இயக்கப் போகிறார்.
வினய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைக்கிறார். இவர்கள் கூட்டணியில் பொதுவாக வைரமுத்து இடம் பெறுவார். இந்த படத்தில் அவருடைய மகன் கார்க்கி அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.
பாடல் பதிவுடன் படம் ஆரம்பமானது.