‘நம்பர் 1’ என்பது வாரத்திற்கு வாரம் மாறும் – சமந்தா

     ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மீண்டும் ஒரு முறை நடந்தது. இந்த முறை ‘சமந்தா’விற்காக…

படத்தின் வெளியீட்டிற்கு முன் தினம், கௌதம் மேனன், இளையராஜா, ஹீரோ ஜீவா, நா. முத்துக்குமார், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ஆகியோர் சந்தித்தனர். அப்போது நடந்த சந்திப்பிற்கு ‘சமந்தா’ ஹைதராபாத்தில் இருந்ததால் வரவில்லை.

எனவே, நேற்று சமந்தா  இயக்குனர் கௌதம் மேனன்,தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

முதலில் கௌதம் பேசிய போது,“என்னுடைய எந்த படம் வெளியாகும் போதும், இரு விதமான பேச்சுக்கள்தான் வெளிவரும், குறிப்பாக அதிகம் நெகட்டிவ்வாக விமர்சிக்கும் படமாக அமையும். பின்னர்,  என்னுடைய படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமையும். சிலர், இந்த படம் பிடிக்கவில்லை என்கிறார்கள், அவர்களுக்கு என்னுடைய படம் அதிகம் பிடிக்கும் ” என, எதிர் மறையாக விமர்சிப்பவர்களுக்கும் சேர்த்து பதிலளித்தார்.

சமந்தா பேசும் போது, ‘இந்த நித்யா கேரடக்டரில் நடிக்க வைத்ததற்கு இயக்குனர் கௌதம் அவர்களுக்கு என்னுடைய நன்றி…என் நடிப்பை அனைவருமே பாராட்டுகிறார்கள், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  இந்த படம் மூலம் என்னுடைய திறமையை மேலும் வெளிப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பாக அமைந்தது”, என்றார்.

தெலுங்கில் நீங்கள்தானே நம்பர் 1 என நாம் கேட்டதற்கு, “ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்  அது மாறும், புதுப்படங்கள் வெளியாக வெற்றி பெறும் போது, அந்த படத்தில் நடிப்பவர்களுக்கு அதிகமாகவே பெயர் கிடைக்கும். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுப்பதால், என்னை அனைவரும் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்,” என்றார் .

அந்த மகிழ்ச்சி சாதாரணமாக இல்லாமல், அளவு கடந்த மகிழ்ச்சியாக  அவரிடமிருந்து வெளிப்பட்டது.

Read Previous

தவறுதலாக வந்தாலும் ஆசை..ஆசை..தானே…

Read Next

பொங்கலுக்கு ‘லட்டு தின்ன ஆசையா’