பொங்கலுக்கு ‘லட்டு தின்ன ஆசையா’

  தலைப்பைப் பார்த்ததுமே எல்லாருக்கும் கண்டிப்பா புரிஞ்சிடும்…ஆமாம்..‘சந்தானம், பவர்ஸ்டார்’ சூப்பர் காம்பினேஷன்ல ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கு.

மூணு பேர் ஒரே பெண்ணை காதலிக்க போட்டி போடற இந்த படத்துக்கு ‘யு’  சர்டிபிகேட்  கிடைச்சிருக்கு.  படத்தோட இசை விழாவை ஷங்கர் , சிம்பு இரண்டு பேரையும் வச்சி நடத்தி, அட்டகாசமான டிரைலரையும் வெளியிட்டு இன்றைய யூத்தோட வரவேற்பை அமோக வாங்கிட்டாங்க சந்தானமும், பவர் ஸ்டாரும்.

முதல்ல, இந்த டிசம்பர் மாசமே படம் வெளிவந்துடும்னு ஒரு பேச்சு இருந்தது. இப்ப 2013 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் பண்றாங்கன்னு நியூஸ் வந்திருக்கு…

பொங்கலுக்கு கரும்பு கூட சேர்த்து இந்த கலகலப்பான ‘லட்டு’ தின்னவும் ஆசையோட ரெடியா இருங்க.

Read Previous

‘நம்பர் 1’ என்பது வாரத்திற்கு வாரம் மாறும் – சமந்தா

Read Next

இன்றைய ரிலீஸ்…