இன்று டிசம்பர் 21 இரண்டு தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன.
சட்டம் ஒரு இருட்டறை
எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ் சார்பாக விமலா ராணி தயாரித்துள்ள படம்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படத்தின் ரீமேக் இந்த திரைப்படம். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில், விஜயகாந்த், பூர்ணிமா தேவி நடிப்பில், 1981 , பிப்ரவரி 14 அன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்.
இப்போது, எஸ். ஏ. சந்திரசேகர் கதை, திரைக்கதை எழுதி க்ரியேட்டிவ் ஹெட் ஆக இருக்க, அவரது உறவினர் சினேகா பிரிட்டோ இயக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ‘ஆச்சரியங்கள்’ படத்தில் நடித்த தமன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பியா, ரீமா சென், பிந்து மாதவி ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
தமிழில் வெற்றிகரமான ஓடிய பின், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர் நாக், மலையாளத்தில் கமல்ஹாசன், ஹிந்தியில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் நடிக்க 5 மொழிகளில் வெற்றி பெற்ற படம்.
கள்ளத் துப்பாக்கி
கே.சி. ரவிதேவன் வழங்க, திதிர் பிலிம் ஹவுஸ் சார்பாக சிவகாசி எஸ்.முருகேசன், தேவி ரவிதேவன் தயாரித்துள்ள படம். இயக்கம் – லோகியாஸ், இசை – எஸ்.கே. பாலசந்திரன். விக்கி, விஜித், பிரபாகரன், எஸ்.பி. தமிழ்ச் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவாந்திகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ பட டைட்டில் பிரச்சனைக்காக நீதி மன்றம் வரை சென்றது இந்த படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்த ஒன்று.