திரைக்கு வருவதற்கு முன்பே படங்கள் டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்பட்டால், அந்த படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி பின் வருமாறு, இன்று 20-12-2012 நடைபெற்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டு கூட்டத்தில் திரைக்கு வருவதற்கு முன்பே டிடிச் அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் மூலமாக வெளியிடும் எந்த படத்தையும், திரைப்பட அரங்குகளில் வெளியிட ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, மற்றும் அபிராமி ராமனாதன் அவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இதன் மூலம் ‘விஸ்வரூபம்’ திரைப்பட டிடிஎச் ஒளிபரப்பு பிரச்சனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.