விஷால், த்ரிஷா, சுனைனா மற்றும் பலர் நடிக்க திரு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள படம் ‘சமர்’.
இந்த வாரம் டிசம்பர் 28ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், திடீரென இப்போது படத்தின் வெளியீடு பொங்கலுக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் ‘சமர்’ மட்டுமே பெரிய படமாக இருந்தது. மற்ற படங்கள் அனைத்துமே சிறு முதலீட்டுப் படங்கள்தான். இந்த சூழ்நிலையில் சிறு படங்களுடன் ‘சமர்’ வெளியாவதைத் தவிர்த்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதன் மூலம் பொங்கலுக்கு வெளியாகும் ‘விஸ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா,’ ஆகிய படங்களுடன் போட்டியில் குதித்திருக்கிறது ‘சமர்’.