தமிழ் நடிகைகள் யாருக்குமே நம்பர் 1 ஆகறதுல விருப்பம் இல்ல போல இருக்கு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நடிகை சமந்தா, நம்பர் 1ங்கறது வாரா வாரம், வெள்ளிக் கிழமைகள்ல ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் மாறும்னு சொன்னாங்க.
இப்ப லேட்டஸ்ட்டா, நம்பர் 1 பத்தி பேசியிருக்கிறது ‘மைனா’ அமலா பால். தமிழ்ல விஜய் கூட பெயரிடப்படாத படம், ‘ஜெயம்’ ரவி கூட ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்கள்ல நடிக்கிறாங்க.
தெலுங்குல, ராம் சரண் தேஜா கூட ‘நாயக்’, அல்லு அர்ஜுன் கூட ‘இத்தரம்மயிலதோ’, நானி கூட ‘ஜன்டா பை கபிராஜு’ படங்கள்ல நடிச்சிட்டிருக்காங்க.
இப்படி முன்னணி இளம் ஹீரோக்கள் கூடலாம் நடிக்கிறீங்களே நீங்க தான அடுத்து நம்பர் 1 ன்னு கேட்டா, ‘ஐயயோ..இந்த நம்பர் 1, நம்பர் 2 கேம்லலாம் எனக்கு நம்பிக்கை இல்லை, என் வேலைய நான் கரெக்டா செய்யறேன், அதுவே போதும். இதனாலதான் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள்லாம் கிடைக்குது, நிறைய படங்கள்லயும் நடிக்கிறேன்னு,” பதில் சொல்லி இருக்காங்க.