மஹத், பியா, அர்ச்சனா கவி நடிப்பில் அனிருத் இசையமைபில் மதுரா ஸ்ரீதர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் படம் ‘பேக் பென்ச் ஸ்டூடன்ட்’.
இந்த படத்திற்காக ஒரு ரீமிக்ஸ் பாடலை அனிருத் இசையில் பாடியிருக்கிறார் சிம்பு. நாகார்ஜுனா, கிரிஜா நடித்து இளையராஜா இசையில் சூப்பர் ஹிட்டான படம் 1989ல் வெளிவந்த ‘கீதாஞ்சலி’. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஜகடா..ஜகடா…’ என்ற பாடலைத்தான் சிம்பு பாடியுள்ளார்.
இப்பாடலுக்காக வித்தியாசமான குரல் தேவைப்பட்டதால் தன்னுடைய நண்பரான சிம்புவை பாடச் சொல்லியிருக்கிறார் மஹத், அதற்கு இயக்குனர் ஸ்ரீதரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
தனுஷின் உறவினரும் இசையமைப்பாளருமான அனிருத் இசையில் சிம்பு பாடியிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.