விஜி தம்பி இயக்கத்தில் சரண்யா மோகன், வினீத், மனோஜ் கே. ஜெயன் நடிக்கும் படம் ‘அருந்ததி வேட்டை’.
மலையாளத்தில் ‘கெமிஸ்ட்ரி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அருந்ததி வேட்டை’ ஆகிறது.
இன்று நாடெங்கிலும் பிரச்சனைகளுக்குரிய விஷயமாகக் கருதப்படுவது பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பற்றித்தான். அந்த விஷயத்தைத்தான் இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.
வினீத் ஒரு கல்வி நிலையத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார். புனிதமான ஆசிரியர் வேலையை வைத்து , பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அப்படி படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி , சரண்யா மோகனின் உடம்பில் புகுந்து கொண்டு எப்படி வினீத்தையும், அவனைச் சார்ந்தவர்களையும் பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
மித்து மூவீஸ் ஜெயராம், வேல் பிலிம்ஸ் வேல்முருகன் இணைந்து தயாரிக்கும் படம் இது.
படு பயங்கர திகில் படமான இப்படம் ஜனவரி 4ம் தேதி திரைக்கு வருகிறது