‘திருமதி தமிழ்’ படம் வரும் 19ம் தேதிய வெளியாவதை முன்னிட்டு நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள் படக் குழுவினர்.
படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ராஜகுமாரன், தயாரிப்பாளரும் நாயகியுமான தேவயானி, மற்றொரு நாயகியான கீர்த்தி சாவ்லா, இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
ராஜகுமாரன் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதற்கு இரண்டு காரணங்கள்…ஒன்று…நேற்று அவருக்கும் தேவயானிக்கும் திருமண நாள்..இரண்டு…படத்தின் டிரைலரைப் பார்த்து ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கிறார்களாம்.
ராஜகுமாரன் பேசும் போது கூறியது,
“படத்தோட ஆடியோவை நாங்களே சொந்தமா வெளியிட்டால் மாதிரி, படத்தையும் நாங்களே சொந்தமா வெளியிடறோம்..
தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகள்ல படம் வெளியாகுது. கடந்த சில நாட்களா பல திரையரங்குல படத்தோட டிரைலரரை வெளியிடறோம்…
“டேய்….வெளிய போயிடுவோமாடா…..ன்னு டிரைலர் போடும் போது யாருமே தியேட்டரை விட்டு வெளிய போகலை. விசிலடிச்சி ரசிச்சாங்க…
கண்டிப்பா படம் உங்க எல்லாரையும் ரசிக்க வைக்கும், ” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராஜகுமாரன் பேசப் பேச அதை சிரிப்புடன் ரசித்தார் தேவயானி.
அந்த சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தங்கள்…….